லோகேஷ் கனகராஜ் வெளியிடும் முதல்படம்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார், ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஃபைட் கிளப்’. இதில் உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்புப் பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், கதாநாயகனான விஜய் குமாரின் வித்தியாசமான தோற்றம் இரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இப்படத்தினை நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர் சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக வழங்குகிறார். இதனால், ‘ஃபைட் கிளப்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.bb











