தனுஷின் அடுத்த பட வெளியீட்டுத் தேதி உறுதியானது
மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த படம் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.
இப்படம் 2018 தீபாவளி நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்போது வெளியாகவில்லை.
இப்போது, பிப்ரவரி 14 காதலர் நாளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. பொங்கல் நாளையொட்டி விரைவில் இப்படம் குறித்த புதிய தகவல் வரும் என்று தயாரிப்பாளர் மதன் சொல்லியிருந்தார். அது இதுதான் என்கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாட்களில் இப்பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.












