சினிமா செய்திகள்

அட்லி ஷாருக்கான் படத்தின் கதை – இந்தப்படத்தின் காப்பியா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது.

அப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் அப்படத்தின் இயக்குநர் அட்லியின் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம், அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கப்போகிறார் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

அதற்கான திரைக்கதை எழுதும் வேலைகளில் அட்லி ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து உலவும் தகவல்…

சிவாஜிகணேசன் கே.ஆர்.விஜயா ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான படம் தங்கப்பதக்கம். மாதவன் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தை ஷாருக்கானிடம் காட்டி இதைத் தற்காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து எடுக்கலாம் என்று அட்லி சொன்னாராம். ஷாருக்கானுக்கும் அந்தப்படம் பிடித்துவிட்டதாம். அதனால் அட்லி சொன்னதை ஏற்றுக் கொண்டு திரைக்கதை எழுதச்சொல்லியிருக்கிறாராம்.

இதனால் உற்சாகமான அட்லி வேகமாகத் திரைக்கதையைத் தயார் செய்துகொண்டிருக்கிறாராம்.

பிற இயக்குநர்கள் வேற்றுமொழிப் படங்களைக் காப்பியடித்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும்போது பழைய தமிழ்ப்படங்களைக் காப்பியடித்து அட்லி படமெடுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதற்கேற்றாற்போலவே ஷாருக்கான் படத்தின் கதை பற்றிய தகவலும் அமைந்துள்ளது.

Related Posts