October 22, 2026
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்துக்குக் கிடைத்த பெரிய விலை – படக்குழு உற்சாகம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் 2020 ஏப்ரலில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேதி சொல்லவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ‘சன் தொலைக்காட்சி’ பெற்றுள்ளது.இந்தத் தகவலை அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக வெளியிட்டுள்ளது.

என்ன விலை? என்பதை அவர்கள் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள்.

விலை குறித்து திரையுலிகில் உலவும் தகவல், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக சன் தொலைக்காட்சி 18 கோடி கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறதாம்.தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து இந்தத் தொகையாம். தமிழுக்கு 15, தெலுங்குக்கு 2, மலையாளத்துக்கு 1 என்பது அவர்கள் கணக்காம்.

எப்படியிருப்பினும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப்படத்துக்கு இந்த விலை பெரிது என்கிறார்கள்.அதனால் படக்குழுவினர் உற்சாகமாக இருக்கிறார்களாம்.

Related Posts