ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,இசை அனிருத்.
படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். .
இப்படத்தின் நாளை (ஏப்ரல் 10,2019) மும்பையில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல்9,2019) காலை எட்டரை மணிக்கு படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் பெயர் தர்பார். ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதைச் சொல்லும் விதமாக முதல்பார்வை அமைந்துள்ளது.











