சினிமா செய்திகள்

விஜய்யின் சர்கார் பட முதல்பார்வை நீக்கப்பட்டது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் முதல்பார்வை, ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து புகைப் பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அத்துடன் உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்‌பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியிடப்பட்ட ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

இதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Related Posts