அரவிந்த்சாமி படம் வேண்டாம் அலறும் திரையரங்குக்காரர்கள்
அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.
மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம்.
இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில் இப்படத்தை முப்பத்தியாறு திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கடைசி நேரத்தில் பாதி திரையரங்குக்காரர்கள் இப்படத்தைத் திரையிட முன்வரவில்லையாம்.
அவர்கள் வேறு புதியபடத்தைத் திரையிடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.
இந்தத் திரையரங்குகளில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தைத் திரையிடுகிறார்களாம்.
இதனால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறதாம்.











