சாந்தினி நடிக்கும் ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி
திரையுலகைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது திகில் படங்களாகத்தான் இருக்கும். வசூல் பாதுகாப்பு மற்றும் வெற்றியையும் திகில் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குநர்கள் திகில் படங்கள் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..
அந்தவகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள திகில் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி.
ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.
திகில் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீன் படத்தொகுப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இப்படத்தின் பூஜை ஏப்ரல் 22 அன்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Tun L Hotel House Boat Resort-ல் ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.









