September 25, 2026
சினிமா செய்திகள்

ஜவான் – தமிழ்நாடு கேரள உரிமை விலை

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜவான்.இப்படத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோன்,நயன்தாரா,விஜய்சேதுபதி,சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்தப்படத்துக்கு இசை அனிருத்.

ஜவான் திரைபடத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இது இந்திப்படம் என்றாலும் அட்லீ இயக்கம், விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட தமிழின் முன்னணிக் கலைஞர்கள் இடம்பெற்றிருப்பதால் தமிழ்நாட்டிலும் இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதனால் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமைக்காகத் தயாரிப்பு நிறுவனம் கேட்ட தொகை பெரிது. அவ்வளவு பணம் கொடுத்து வாங்கினால் தாங்கமுடியாது என்று பலர் பின்வாங்கிவிட்டார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகளில் வெளீயிடும் உரிமையை கோகுலம் நிறுவனம் பெற்றிருக்கிறது.

இவ்விரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கும் தொகை சுமார் இருபத்தியிரண்டரை கோடி என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கென்று தனியாகக் கணக்குப் போட்டால் குறைந்தது சுமார் பதினைந்து கோடியாவது இருக்கும் என்கிறார்கள்.விஜய்சேதுபதி வில்லன், நயன்தாரா நாயகி என்பதால் நம்பி வாங்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை என்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Posts