சூர்யா – சிறுத்தைசிவா படம் கைமாறியது – தெலுங்கு தயாரிப்பாளர் கைப்பற்றினார்
சூர்யா இப்போது பாலா இயக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றிற்கிடையே சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ஒன்றும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் அதில் ஓர் அதிரடி மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
சிறுத்தை சிவா சூர்யா இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் இப்படத்தைத் தயாரிப்பது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு என்றும் சொல்கிறார்கள்.
ஸ்டுடியோகிரின் நிறுவனத்திடமிருந்து அப்படியே இப்படத்தை தில்ராஜு கைப்பற்றிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
தில்ராஜு இப்போது விஜய்யின் 66 ஆவது படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தையும் அவர்தான் தயாரிக்கிறார்.
அவற்றோடு இப்போது சூர்யா படத்தையும் அவர் தயாரிக்கிறார் என்கிற தகவல் பலரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.











