சினிமா செய்திகள்

அஜீத் 61 இல் இணையும் அனிருத் – புதிய தகவல்கள்

அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக அப்படம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார்.

வலிமை வெளியீட்டுக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருந்தார்களாம்.வலிமை வெளியாகாவிட்டாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறார்களாம். அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கவிருக்கிறதாம்.

ஏகே 61 என்றழைக்கப்படும் இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார் அனிருத். அதன்பின் வந்த அஜீத் படங்களுக்கு டி.இமான், யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் இசையமைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் அஜீத் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts