விக்ரம் படத்தில் ஃபகத்பாசில் ஹீரோ விஜய்சேதுபதி வில்லன் – கமலுக்கு என்ன வேலை?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில், காளிதாஸ், நரேன் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16,2021 அன்று தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்துவருகிறது.டிசம்பர் முதல்வாரத்துக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.
இப்படத்தில் கமல் ஒரு தாதாவாக நடிக்கிறாராம்.படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை. ஒரு மகன் உண்டு. அவரும் கொலை செய்யப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.கமலுக்கு உதவியாளராக நரேன் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் ஆகிய வேலைகளைச் செய்கிறாராம் விஜய்சேதுபதி. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரியாக ஃபகத்பாசில் நடிக்கிறாராம்.
இதன்படி பார்த்தால், படத்தில் ஃபகத்பாசில் வேடம் கதாநாயகனுக்குரியதாகவும் விஜய்சேதுபதி வேடம் வில்லனுக்குரியதாகவும் இருக்கிறது.
இதற்குள் கமல் எங்கு வருகிறார்?
அவர் கெளரவத் தோற்றம் என்று சொல்லப்படுகிற அளவில்தான் படத்தில் இருக்கிறாராம். கமல் படம் என்றால்தான் பெரிய வியாபாரம் இருக்கும் என்பதால் கமல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்றும் சொல்கிறார்கள்.











