சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் – தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் விலை விவரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தில் இடம்பெறும் கண்டா வரச் சொல்லுங்க என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாளை (மார்ச் 2) இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளதாம்.

இந்த உரிமைக்காக அந்நிறுவனம் கொடுத்த தொகை சுமார் பத்து கோடி என்று சொல்லப்படுகிறது.

Related Posts