சினிமா செய்திகள்

விஷால் 33 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26 ,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்று (டிசம்பர் 16,2021) மாலை ஆறு மணிக்கு வெளியாகியிருக்கிறது .

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்.

பெரும்பொருட்செலவில் பேன் இந்தியா எனப்படும் பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருக்கிறார்.

Related Posts