விஜய் வசூல் சக்ரவர்த்தியாக இருக்க இதுதான் காரணம்
விஜய் பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பார்வை…
விஜயின் கரியரை கவனித்திருக்கிறீர்களா? கடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்..
2000க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை இது
2000 – 3
2001 – 3
2002 -3
2003 – 3
2004 -3
2005 – 3
இது விஜய் வேகமாக வளர்ந்த காலம். அவரது போட்டியாளராக அப்போது உருவாகியிருந்த அஜித், சூர்யா, விக்ரம் யாருக்குமே இந்த மாதிரி அமையவில்லை. அல்லது, அவர்கள் அபப்டி திட்டமிடவில்லை. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு இது மிக அவசியம் என நினைக்கிறேன். ஆண்டுக்கு 2 படங்கள் தோல்வியானால் கூட ஒரு படம் காப்பாற்றிவிடும்.
அப்படித்தான் இந்தப் படிட்யலில் குஷி, ஃப்ரெந்ஸ், யூத், திருமலை, கில்லி, திருப்பாச்சி எல்லாம் விஜயை வளர்த்தன. சென்ற ஆண்டுக்கு கூட பைரவா என்ற தோல்வியை மெர்சல் மேஜிக் மறக்க வைத்ததை கவனிக்கலாம்.
ஆனால், அதே சமயம் வளர்ந்த பிறகும் ஆண்டுக்கு மூன்று படங்கள் என்பது எதிர்பார்ப்பைக் குறைக்கலாம். 2007ம் ஆண்டு போக்கிரி, அழகிய தமிழ்மகன் என எண்ணிக்கையை இரண்டாக குறைத்தார். அது 2012 வரை தொடர்ந்தது. அதன் பின், இப்போது 2 ஆண்டுக்கு 3 படங்கள் என வெளிவருகின்றன.
அதில் ஒன்று பைரவா , ஜில்லாவென இருக்கும். விஜய்யின் படங்கள் எல்லோருக்குமானவை. ஒரு வீட்டிலிருந்து 5 பேர் படம் பார்க்க சென்றால், எல்லோருக்கும் அந்தப் படத்தில் எதாவதொரு விஷயம் இருக்க வேண்டும். போலவே, ஏ,பி,சி என அனைத்து சென்டர்களுக்கும் படம் எடுக்க வேண்டும். வசூலில் சாதனை செய்த கஜினியை விட சண்டக்கோழிதான் பி&சி ஹிட். அந்த ஏரியாதான் கோலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட். அவர்களுக்காக அவ்வப்போது ஒரு படம் விஜய் நடித்தே ஆக வேண்டும்.
இது யதேச்சையாக நடந்ததல்ல. தெளிவான திட்டமிடல். இதுதான் விஜய்யை இன்று நெம்பர் ஒன் ஆக்கியிருக்கிறது என நினைக்கிறேன்.சினிமாவில் விஜய் எப்போதும் நேரம் தவறாத ஆள் என்பார்கள்.
இத்தனை மணிக்கு வருகிறேன் என்றால் வந்துவிடுவார். அதுமட்டுமில்லாமல், எல்லா விஷயங்களிலும் விஜயின் திட்டமிடல் பக்காவாக இருக்கும். அது அனிதாவை பார்க்க போவதென்றாலும் சரி, அழகிய தமிழ் மகன் பட ரிலீஸ் என்றாலும் சரி. பணம் விளையாடும் சினிமா துறையில் வசூல் சக்ர்வர்த்தியாக இருக்க ஆன் ஸ்க்ரீன் திறமை மட்டுமே போதாது. அது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
வெற்றி பெற்ற எல்லோரிடமும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். விஜயிடமிருந்து இந்தத் திட்டமிடலைக் கற்றுக்கொள்ளலாம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்.
– கார்க்கிபவா











