சினிமா செய்திகள்

விட்டுவிட்டுப் போன விஜய் ஆண்டனி – அதிர்ச்சியில் இயக்குநர்

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன் உட்பட சில படங்கள் தயாராக இருக்கின்றன. அவரே இயக்கும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் இருக்கிறது.

இப்போது அவர் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

ஆனால் இந்நேரம் அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதுதான் திட்டம். 

வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குநர் தனா இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப்போவதாகவும், அந்தப்படத்தை ராஜவம்சம்,கோடியில் ஒருவன் உட்பட சில படங்களைத் தயாரித்த டிடி.ராஜா தயாரிப்பதாக இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல்வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தனவாம்.

ஆனால் திடீரென அந்தப்படத்தை நிராகரித்துவிட்டு சுசீந்திரன் படத்துக்குப் போய்விட்டாராம் விஜய் ஆண்டனி.
இதனால் இயக்குநர் தனா அதிர்ச்சியில் இருக்கிறாராம். இன்னொருபக்கம் அவர் சரியாக நடந்துகொள்ளாததால்தான் விஜய் ஆண்டனி விலகிப்போய்விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்துச் சொன்னால்தான் சரியான விவரம் வெளியாகும்.

Related Posts