ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம் விரூபாக்ஷா. நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல். சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது.
திரைப்பட இயக்குநர் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்… பிரபல மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தசரதம். இந்தப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றி















