பரியேறும்பெருமாள் போன்று சமுதாயப் பொறுப்புடன் எடுக்கப்படும் படங்கள் நல்ல பெயரைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இலாபம் சம்பாதித்துக் கொடுக்காது என்று திரை வர்த்தகர்கள் விடாமல் பேசுகிறார்கள். ஆனால் அதைப் பொய்யாக்கி வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அந்தப்படம். அந்தப்படம் வெளியான செப்டம்பர் 28
உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் பரியேறும்பெருமாள் படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்
பரின்னா குதிரை அதில் ஏறிவரும் பெருமாள் என்கிற சாமியின் பெயர்தான் பரியேறும்பெருமாள். படத்தில் நாயகனின் பெயர். திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நாயகன் கதிர், தம் சமுதாய மக்களைப் பாதுகாக்கச் சட்டம் படித்தாக வேண்டும் என்கிற ஊர்ப்பெரியவரின் விருப்பத்தை ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறார். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,
நடிகர் சித்தார்த் தன் செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். எதற்காகத் தெரியுமா? பரியேறும் பெருமாள் படத்துக்காக. பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்
















