பிப்ரவரி 24 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மார்ச் 11 ஆம் தேதி ஒரேநாளில் சென்னையில் மூன்று இடங்களில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார்.












