2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியமே அல்லோல கல்லோலப்பட்டது. வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் ஏராளமாய் வதைபட்டார்கள்.












