பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார்.














