ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது. பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார்.












