ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற மோடி அரசு முன்வந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் அதனடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும்.












