நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான்
இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில், பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயகியாக நடிக்கிறார்.”அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார்.சினாமிகா இன்னொரு நாயகியாக












