லாஸ்லியா பற்றி கருத்து சொல்லி மாட்டிக் கொண்ட கஸ்தூரி
பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியுள்ளார். அவர் வெளியேறுகிற நேரத்தில், வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் தடுத்தும் அவர் அதை கேட்கவில்லை.
அவரது காதலி என்று சொல்லப்படுகிற லாஸ்லியாவும் கவின் வெளியேற வேண்டாம் என்று கண்ணீர் விட்டுக் கேட்டும் அவர் ஏற்கவில்லை.
கவின் வெளியேறிய போது, லாஸ்லியா கதவு அருகே நின்று கதறி அழுத காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
அதனால் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் லாஸ்லியா.
அதுகுறித்துப் பதிவிட்ட நடிகை கஸ்தூரி,
என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா
என்று பதிவிட்டிருந்தார்.
அதனால் அவரைப் பலர் திட்டித்தீர்க்கின்றனர்.
தவறு செய்துவிட்டீர்கள் கஸ்தூரி அவர்களே? தேவையற்ற பதிவு…
தர்ஷன் செரினின் குப்பை கள்ள காதல் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் போல…
ஒரு தனிநபரை தாக்கி பதிவிட்டால்… உங்களை பற்றியும் நான் நிறைய பேச வேண்டிவரும்… யாரும் இங்கு ஒழுக்கம் இல்லை … நீங்கள் உட்பட…?
இது உட்பட கஸ்தூரியை விமர்சிக்கும் நிறைய கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.











