அஜீத்தின் வலிமையில் யாமிகெளதம் இல்லை இவர்தான் நாயகி?
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு, ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.
முதற்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்களாம்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். இதற்காகத் தன் உடலமைப்பை மாற்றியுள்ளார். மேலும், நீண்ட நாட்கள் கழித்து கறுப்பு முடியுடன் அஜித் தோன்றும் காட்சிகள் இடம்பெறவுள்ளதாம்.
இதுவரை இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால்,இந்தி நடிகை யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம், யாமிகெளதம் வேண்டாம் என்று இயக்குநர் சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. அவருக்குப் பதிலாக பரினிதி சோப்ரா வை நடிக்க வைக்கலாம் என்று அவர் சொல்லியிருக்கிறாராம்.











