விமர்சனம்

அந்தரன் – திரைப்பட விமர்சனம்

நாயகி இவானாவருணை யாராவது காதலித்தாலும் திருமண நிச்சயம் செய்தாலும் அவர்கள் மரணமடைந்துவிடுகிறார்கள்.இநு இயற்கையாக நடப்பதில்லை யாராலோ திட்டமிட்டு நடத்தப்படுவது என்கிற ஐயம் எழுவதால் காவல்துறை விசாரணை நடக்கிறது.
விசாரணை அதிகாரியாக வரும் நாயகன் பிரஜினுக்கு நாயகி மீது காதல் வருகிறது.அதன்பின் அவர் நிலை என்ன? என்னென்னவெல்லாம் நடக்கின்றன என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் அந்தரன்.

காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின்,காதலனாகவும் சரியாகப் பொருந்தி வியப்பேற்படுத்தியிருக்கிறார்.

கதை மொத்தமும் தன்னைச் சுற்றித்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார் நாயகி இவானா வருண்.காதல் காட்சிகளில் நளினத்தையும் பதறும் நேரங்களில் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் ஆகிய அனைவரும் பொறுப்பாக நடித்து தங்கள் பாத்திரங்களுக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், காதல் மற்றும் பாடல்காட்சிகளை வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.திகில் மற்றும் மர்மக் காட்சிகளில் வேறுவகையான ஒளியமைப்பு மற்றும் வண்டங்களைப் பயன்படுத்தி காட்சிகளுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

எஸ்.ஆர்.ஹரியின் இசையில் பாட்ல்கள் நன்றி.பின்னணி இசை மூலம் காட்சிகளுக்குக் கூடுதல் வலுச்சேர்த்திருக்கிறார்.

இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் கொரோசோவா ஆகிய இருவரும் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.படம் சலிப்பின்றி போகிறது.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் இராவணன்,வலிமையான கதை,அதற்குப் பலம் சேர்க்கும் திரைக்கதை ஆகியனவற்றை அமைத்து அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts