உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்க்கையைப் படமாக்குவதற்குப் பெரும் துணிவு வேண்டும்.ஏனெனில் அது மிகப்பெரும் கடல்.அதில் எந்துத்துளியைப் படமாக்குவது என்கிற கேள்வி வரும், திகைத்துப் போவோம்.அந்த சவாலை எதிர்கொண்டு திருக்குறள் இயற்றியது மட்டுமின்றி அவர் ஒரு போராளியாகவும் இருந்தார்
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வள்ளுவராக












