காலா படத்தின் சேலம் வசூல் மிகக் குறைவு – படக்குழு அதிர்ச்சி
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியானது.
இன்றோடு பனிரெண்டு நாட்களாகிவிட்டன. ஆனால் படத்தின் வசூல் நிலவரம் மிகவும் கவலை கொள்ளத்தக்க நிலையில் தான் இருக்கிறதாம்.
காலா படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை செவன்ஜிசிவா என்பவர் வாங்கினார்.
மின்மம் கியாரண்டி அடிப்படையில் சுமார் ஆறு கோடிக்கு படத்தை வாங்கினாராம்.
ஆனால் பணத்தை பேசியபடி முழுமையாகத் தரவில்லையாம். சுமார் நாலே முக்கால் கோடி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி வசூல் சரியில்லை என்றதும் மினிம ம் கியாரண்டியை டிஸ்டிரிபியூசனாக மாற்றச் சொல்லிக் கேட்டாராம்.
தயாரிப்பு நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டதாம்.
இந்நிலையில் இப்போதுவரை சுமார் இரண்டு கோடிதான் சேலம் பகுதி வசூல் என்று சொல்கிறாராம்.
ரஜினி படங்களுக்கு சேலம் பகுதியில் மற்ற பகுதிகளை விட கொஞ்சம் கூடுதலாகவே வசூல் இருக்கும் என்பார்கள்.
ஆனால் இப்போது தமிழகத்தின் எல்லாப் பகுதிகளையும் விட சேலத்தில் வசூல் குறைவு என்பது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.











