2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது. ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இந்தித் திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றான இந்தப்













