பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள் இருக்கும்.இந்தப்படமும் ஒரு பயணப்படம்தான்.ஆனால் முற்றிலும் மாறுபட்டு இது ஒரு உடலத்தின் பயணம். அமரர் ஊர்தி ஓட்டுநரான
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன்,













