வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே












