சூர்யாவின் ஜெய்பீம் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. மணிகண்டன் ரஜிஷாவிஜயன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர்,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி.
இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஜகண்ணு காவல்துறையினரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார்.
அவரது மனைவியான செங்கேணி தன் கணவனை தேடத் தொடங்குகிறாள்.
அதற்காக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ஜெய் பீம் கதை.
சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கும் இந்தப்படம் திரையரங்குகளுக்கு வராமல் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், இப்படம் நவம்பர் 2 ஆம் தேதி முதல்ஒளிபரப்பாகும் என்று சூர்யா அறிவித்துள்ளார்.