January 13, 2025
சினிமா செய்திகள்

இமையின் இதழால் நீ சிரித்தாய் கண்ணில் கைதானேன் – இளைஞர்களை ஈர்க்கும் பாடல்

கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஸ்டார்.இப்படத்தை, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் பாடலொன்று நேற்று மாலை வெளியானது.

யுவன்ஷங்கர்ராஜாவே பாடியுள்ள அப்பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார்.

இப்பாடல் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இக்காலகட்டத்தில் பாடல்கள் இரைச்சலாக இருக்கின்றன.வரிகளே புரிவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.அப்படியில்லாமல் இப்பாடல் வரிகள் நன்றாகப் புரிவதோடு காதலைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது பாடலின் பலமாக அமைந்திருக்கின்றன.

இவ்வாண்டின் வெற்றிப் பாடல்களில் ஒன்றாக வலம்வரவிருக்கும் இப்பாடல் வரிகள்….

இருவிழிப் பாதையில் காத்திருந்தேன்
இந்த தாமதம் ஏனோ நிலவே
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே

புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே

இவன் போல்
ஒரு இன்பம்துன்பமோ ஓ யாரோ
மதில்மேலே
ஒரு பூனையாகிறேன் நானே

நான் கடந்து போகும் நாட்குறிப்பில்
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமையின் இதழால் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்

ஒருநாள் நடந்ததெல்லாம்
மீண்டும் வாராதோ
அருகே நீ இருந்தும்
ஆசை தீராதோ

வெண்ணிற மேகமும் தன்னாலே
தூறலை பொழியுது உன்னாலே
மீன்கள் கண்ணாலே
தூண்டிலை திருடிப்போனாளே

தனியே உன்னை காணும்போது
தலைமேல் அந்த வானமேது
விழியில் வந்து போனபடி
ஒருவிளக்கம் சொல்ல வார்தையேது

திரும்பும் எல்லாம் திசையானாய்
தித்திக்கின்ற விஷமானாய்
நினைவால் எந்தன் வசமானாய்
நெஞ்சுக்கே இசையானாய்

என் கைரேகையே
உன் கூந்தல் கீறல்கள்தானே மறவேனே
உயிர் வாழும் நாள் வரை

ஏய் எட்ட நின்னு பட்டாம்பூச்சி
வட்டம் போடுதே
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே.
ரெட்ட கண்ணு கட்டிபோடா
கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே

இப்பாடல் காணொலி பார்க்க….

Related Posts