September 7, 2024
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் குறித்த வதந்தியும் விளக்கமும்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவை தயாரிப்பாளர் சூர்யா எடுத்திருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வந்தன.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் ஒன்றுகூடி சூர்யாவுக்கு எதிரான முடிவை எடுக்கவிருக்கிறார்களாம்.

அதன்படி இனிமேல் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்கிற முடிவை எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் உடனடியாக சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் சூரரைப்போற்று படத்துக்குச் சிக்கல் என்கிறார்கள்.

அப்படம் உடனடி வெளீயீட்டுக்குத் தயாராக இருக்கிறது. அப்படம் தொடர்பாக வியாபாரங்களும் பேசி முடிக்கப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் சிக்கலுக்குள்ளாகும் என்கிறார்கள்.

இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படமும் நேரடியாக இணையத்தில் வெளீயாகவிருக்கிறது என்றொரு தகவல் பரவியது.

மாஸ்டர் படக்குழுவைச் சார்ந்தவர்கள் இது முற்றிலும் தவறு, கொரோனா சிக்கல் முடிந்ததும் சரியான தேதியில் திரைரங்குகளில் படம் வெளியாகும் என்கின்றனர்.

Related Posts