பரிவர்த்தனை – திரைப்பட விமர்சனம்

முக்கோணக்காதல் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு இக்காலத்திற்கேற்ப வந்திருக்கும் படம் பரிவர்த்தனை.
நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதியை திருமணம் செய்து வேண்டாவெறுப்பாக வாழ்கிறார். அதேநேரம் சுவாதியின் தோழி ராஜேஸ்வரி, திருமணமே வெண்டாமெனச் சொல்லி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.
கணவனின் வெறுப்புக்கும் தோழியின் துறவுக்கும் தொடர்பிருப்பதை அறியும் நாயகி சுவாதி எடுக்கும் அதிரடி முடிவே படம்.
ஆட்டம் பாட்டம் என எளிதாகப் போகாமல் நின்று நிதானித்து நடிக்க வேண்டிய கட்டாயம் மூவருக்கும். அதைச் சுமையாகக் கருதாமல் சுவையாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.
மோஹித், ஸ்மேகா, பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர், ரயில் கார்த்தி ஆகியோரும் அவரவர் வேடங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரிஷாந்த் அஸ்வினின் இசையில் பாடல்கள் கேடகலாம். பின்னணி இசையில் தாழ்வில்லை.
ஒளிப்பதிவாளர் கே.கோகுல் ஒளிப்பதிவில் நடிகர்களும் காட்சிகளும் நன்று.
கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளர் பொறி.செந்தில்வேலும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மணிபாரதியும்,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்பதைச் சொல்லும்விதமாக தற்காலப் பெண்களின் தடாலடி முடிவுகளை எதிரொலித்திருக்கிறார்கள்.
பரிவர்ததனை எனும பண்டமாற்றுகள் பலவிதம், இது புதுவிதம்.
– குமரன்