ரஜினியின் 2.ஓ படத்தில் அக்ஷய்குமார் வேடமும் அதன் சிறப்பும்
இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ.
இந்தப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள்.
சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.
இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலீம் அலி ஒரு வேட்டைப் பிரியர்.
பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி.
இதற்கான காரணத்தைத் தன் சித்தப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது.
அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மா சென்றுவிட்டார். அங்கு சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920 இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.
1987 ஜூன் 20 ஆம் நாள் அவர் மறைந்தார்.
அவருடைய வேடத்தைத்தான் அக்ஷய்குமார் ஏற்றிருக்கிறாராம். அவருடைய நிஜ உருவத்தை ஒத்து அக்ஷய்குமாரின் கெட்டப் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் படத்துக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள்.