மாறா – திரைப்பட விமர்சனம்
மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம்.
தமிழ் மாறாவுல…
விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே. எங்கே நேட்டிவிட்டி குளறுபடி வந்திடுமோன்னு பயந்து தமிழ்லையும் படம் கேரளாவுலதான் நடக்குது.
மாதவன் ஓகே. பட் துல்கர் முன்னாடி…ம்ஹும். ஷ்ரத்தா கூட ஓகேதான். ஆனா பார்வதியோட ஆச்சரியங்கள் ஷ்ரத்தாகிட்ட ரொம்ப மெலிஞ்சி இருக்கு. அதனாலோ என்னவோ க்ளைமாக்ஸ் பொறுப்பை ஷ்ரத்தாகிட்ட ஒப்படைச்சிருக்காரு இயக்குநர் திலீப்குமார். ஒரிஜினல்ல எல்லாமே துல்கர்தான்.
நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த ஒரு தமிழ்ப் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கு. ஜுனியர் பாலையா, ஆர் எஸ் சிவாஜி, அப்புகுட்டின்னு காணாப்போனவங்கன்னு நிறைய பேர். ஒரிஜினல்ல கல்பனா பண்ண விலைமாது கேரக்டர் தமிழ்ல விருமாண்டி அபிராமி. ஹெச் ஐ வி பாசிடிவ் வந்து இறந்துபோகும் கல்பனா மீது வந்த பரிதாபம் ஒரு சதவீதம் கூட அபிராமி மீது வரவில்லை. வார்ம் வெல்கம் அலெக்ஸ் ( இன் மியூசிக் வொண்டர்லேண்ட்).
வசனங்கள் சில இடங்களில் நச். காத்திருந்தேன் பாடலையெல்லாம் வயதான மெளலி காதலுக்கு வைத்திருப்பதெல்லாம் ஓவரு. ஆனாலும் என்னமோ அது உறுத்தல. ஒரிஜினல் பார்த்தப்போ துல்கரும் பார்வதியும் சேரணும்னு ஒரு பக்கம் மனசு நெனச்சாலும் படம் முடிஞ்சி வர்றப்போ ரெண்டு பேரும் பிரிஞ்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்துருக்கும்னு தோணுச்சி. தமிழ்ல அப்டிலாம் தோணல.
மாறா பாக்கலாம் ஒரிஜினல் சார்லியையும் கொஞ்சம் லாஜிக்கையும் மறந்து.
– கணேசகுமாரன்











