அக்டோபர் 14 இல் தொடங்கும் விஷாலின் புதிய படம் – விவரங்கள்
விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஓரிருநாட்களில் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.
இதற்கடுத்து, அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால்.
இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் அரங்கம் அமைக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.
அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் படப்பிடிப்பு நவம்பர் 3 ஆம் தேதி வரை அங்கே நடக்கும் என்கிறார்கள்.
அதன்பின் தீபாவளிக்குப் பின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அது மலேசியாவில் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.