October 29, 2020
சினிமா செய்திகள்

நெருங்கிய நண்பர்களான விஷால் ஆர்யா படத்துக்கு இப்படி ஒரு பெயர்

அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 ஆவது தயாரிப்பாகும். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 ஆவது தயாரிப்பாகும்.

2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடித்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தக் கூட்டணி இணைத்துள்ளது. இந்தத் திரைப்படம் விஷாலின் 30 படம் மற்றும் ஆர்யாவின் 32 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 அன்று ஐதராபாத்தில் ராமோஜிராம் பிலிம் சிட்டியில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பில் இருபதாம் தேதி முதல் விஷால் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.

நிஜ வாழ்வில் நெருங்கிய நண்பர்களான விஷால் ஆர்யா ஆகிய இருவரும் நடிக்கும் இந்தப்படத்துக்கு எனிமி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இப்பெயர் மாற்றத்துக்குட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

Related Posts