சினிமா செய்திகள்

தம்பிராமையா ரோலில் இவரா? தெலுங்கின் ‘விநோதய சித்தம்’

சமுத்திரகனி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. தம்பிராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியானது. சத்யா இசையமைத்திருந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏகாம்பரம் மேற்கொண்டிருந்தார். படத்தின் நாயகனாக தம்பிராமையா நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும், ஓடிடியில் வெளியாகியே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தெலுங்கில் ரீமேக் செய்வதற்காக பணிகள் துவங்கியிருக்கிறது.

தெலுங்கில் நடிகராக மக்கள் மத்தியில் பரிட்சயமாகிவிட்டார் சமுத்திரகனி . அதனால், விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு வெர்ஷனையும் சமுத்திரகனியே இயக்குகிறார்.

அதோடு, படத்தில் சமுத்திரகனி ரோலில் பவன்கல்யாண் நடிக்க இருக்கிறாராம். அதோடு, தம்பிராமையா ரோலில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்.

Related Posts