சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் அடுத்த பட பெயர் மற்றும் நாயகி உள்ளிட்ட விவரங்கள்

விக்ரம்பிரபு இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார்.

அவர், கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரை வைத்துப் படங்கள் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்ப்டங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக விக்ரம்பிரபு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர் வைத்திருப்பதன் மூலம் இது தெரியவருகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக இலட்சுமிமேனன் நடிக்கவிருக்கிறார்.

விக்ரம்பிரபுவின் அறிமுகப் படமான கும்கியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலட்சுமி மேனன். கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவர் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். இவர் ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக குட்டிப்புலி படத்திலும் கார்த்தி ஜோடியாக கொம்பன் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் 2021 பொங்கல்நாளில் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Related Posts