December 12, 2019
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் வானம் கொட்டட்டும் – இன்று தொடக்கம்

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன், சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள்.

பல மாதங்களாக முன் தயாரிப்புப் பணிகளில் இருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

விக்ரம்பிரபு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இத்தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts