சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் முதன்முறை – விஜய்சேதுபதிக்காகக் களமிறங்கிய இயக்குநர்கள்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதல்பார்வை ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

வெளியானதிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் அந்த முதல்பார்வையை, விஜய்சேதுபதியை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர்கள் அனைவரும் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன், புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, கவண் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பேட்ட இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ்,ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பட இயக்குநர் ஆறுமுக குமார்,சங்கத்தமிழன் பட இயக்குநர் விஜய்சந்தர்,றெக்க பட இயக்குநர் இரத்தின சிவா ஆகியோர் துக்ளக் தர்பார் படத்தின் முதல்பார்வையைப் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஒரு படத்தை விளம்பரப்படுத்த இவ்வளவு இயக்குநர்கள் இணைந்தது இதுவே முதல்முறை எனலாம். இது ஒரு நல்ல தொடக்கம் என்பதில் மாற்றமில்லை.

Related Posts