விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடம் என்றால் வில்லன் வேடம்தான்.
விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகியபோது முதலில் மறுத்த விஜய்சேதுபதி அதன்பின் இருபது கோடி கொடுத்தால் நடிக்கிறேன் என்றாராம்.
அதிர்ந்த படக்குழு, விஜய்சேதுபதி நடித்தால் அந்த வேடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்பதோடு படமும் பெரிதாகும் என்பதால் அவரை நடிக்க வைத்தாக வேண்டும் என்று முடிவெடுத்ததாம்.
அதன்பின் அவருக்கு பதினைந்து கோடி சம்பளம் என்று முடிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அதை அவரும் ஏற்றுக்கொண்டாராம். அதன்பின்பே விஜய் 64 படத்தில் அவர் நடிக்கும் அறிவிப்பு வெளியானது என்று சொல்கிறார்கள்.