Uncategorized

விஜய்சேதுபதியின் வியாபார எல்லை அதிகரிப்பு – ஜூங்கா படக்குழு மகிழ்ச்சி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

இப்படம் இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை நல்ல விலைக்கு விற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழகம் முழுக்க எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையிலேயே வியாபாரம் நடந்திருக்கிறதாம்.

இதுவரை இல்லாத வகையில் இப்படம் சுமார் பதிமூன்று கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது தமிழக திரையரங்கு உரிமை மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலங்கள், வெளிநாட்டு வியாபாரம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றைக் கணக்கிட்டால் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் இருக்கும் என்கிறார்கள்.

Related Posts