சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு விஜய் உதவாதது ஏன்? என்ன செய்யப் போகிறார்? – கசியும் தகவல்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர். 

இந்தி, தெலுங்கு நடிகர்கள் நிறைய உதவிகள் செய்துவருகின்றனர்.

ஆனால், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜீத் ஆகியோர் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை.

இதுகுறித்து விஜய் தரப்பில் பேசப்படும் தகவலில், மத்திய மாநில அரசுகள் விஜய் மீது வன்மம் கொண்டு அவர் மீது வருமானவரித்துறையை ஏவிவிட்டு அவருக்குப் பெரும் தொல்லை கொடுத்தனர்.

எனவே அவர்கள் மூலம் எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்றும் ஊரடங்கு முடிவடைந்த பின்பு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மன்றம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்யலாம் என்றும் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கேற்ப ரசிகர் மன்றங்களைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இல்லையா? என்பது ஊரடங்கு முடிந்தவுடன் தெரிந்துவிடும்.

அதேசமயம், இதனால்தான் இதுகுறித்து ஏராளமானோர் விஜய்யை விமர்சனம் செய்தபோதும் எவ்வித எதிர்வினையும் அவர்கள் செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts