November 16, 2019
சினிமா செய்திகள்

மணிரத்னம் படப்பெயரில் ஒரு நெடுந்தொடர்

ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், இவருக்கு படிப்பறிவின் மேல் நம்பிக்கை இல்லை, மேலும் அந்தக் கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று
எண்ணுபவர்.

அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் அபிப்ராயம் இல்லாதவர்.

இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்தக் கிராமத்தில் பிரபலம் ஆவார்.

காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இவருக்கு பிடிக்கவில்லை படிப்பின் பயனைச் சொல்ல விரும்புகிறார் அதற்காக இவர் செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு
பிடிக்காமல் போய்விடுகிறது.

இந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒத்து வரவில்லை. காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது.

ஆனால் அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்கு தெரியவில்லை. படித்த இந்த கலக்டர் பெண்ணனை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு
உண்மை தெரியும்போது என்ன நடக்கும்? என்பதைச் சுற்றி கதை அமையும்.

இதில் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்திரவாக நடிக்கவுள்ளார்.

நடிகை மௌனிகா இந்தத் தொடரின் காளியம்மாவாக நடிக்கவுள்ளார்.அறிமுக நடிகர் அம்ஜத் கான் இந்தத்
தொடரின் சக்திவேலாக நடிக்கிறார்,

ஆயுத எழுத்து என்னும் பெயர் கொண்ட இந்தத் தொடரின் இயக்குநர் பிரம்மா.

மணிரத்னம் இயக்கிய ஒரு படத்தின் பெயர் ஆயுத எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடர் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Related Posts