சினிமா செய்திகள்

ஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைப் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில்,மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஒரு குட்டிக் கதை’ காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று மாலை 5 மணிக்கு வெளியானது.விஜய் பாடியுள்ள அந்தப் பாடல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரும்பாலும் ஆங்கிலத்தில் பாடல் இருக்கிறது என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி இரண்டு நாட்களில் அப்பாடல் காணொலியை ஒரு கோடியே 20 இலட்சம் பேர் பார்த்துள்ளனர் என்றும் இது புதியசாதனை என்றும் சொல்லப்படுகிறது.இதனால் மாஸ்டர் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

விஜய் மீதான வருமானவரித்துறை தாக்குதலின் விளைவு உடனடியாகத் தெரிகிறது என்றும் சொல்கிறார்கள்.

Related Posts