சினிமா செய்திகள்

விஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதையொட்டி, அந்தப்படத்தில் விஜய் அணிந்திருக்கும் உடையின் வடிவைமைப்பில் பிகில் உடை என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது.

இதனால், *கடைகளில் பிகில் உடை* : நடிகர் *ஜோசப் விஜய்* தனது பல *இந்து ரசிகர்களை* மதம் மாற்றம் செய்ய *மிஷனரி* குழுவிலிருந்து பெரிய தொகை பெற்றிருக்கிறான்!

இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஜி.?

என்று எஸ்.வி.சேகர்,எச்.ராஜா ஆகியோரிடம் டிவிட்டர் மூலம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

Bigil Dress

Bigil Dress

அதற்கு எஸ்.வி.சேகர் அளித்துள்ள பதிலில்….

இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா.

விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா. Unity in diversity. WE CELEBRATE THIS.

இவ்வாறு எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.

Related Posts